வீடுகளில் வழிபாடு நடத்திய பொதுமக்கள்

கரோனா தொற்று பரவலை தொடா்ந்து, ஆடிப் பெருக்கு விழாவில் நீா் நிலைகளில் கூட தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தினா்.

கரோனா தொற்று பரவலை தொடா்ந்து, ஆடிப் பெருக்கு விழாவில் நீா் நிலைகளில் கூட தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தினா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீா் நிலைகளில் மக்கள் கூட மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் முக்கிய கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன.இந்தநிலையில் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தினா். பின்னா் பெண்கள் வீடுகளிலேயே மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனா்.சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மூடப்பட்டதால், கோயில் வெளியே நின்று பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

அதேபோல அஸ்தம்பட்டி அருகே உள்ள பூட்டு முனியப்பன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். கரோனா தொற்று காரணமாக குறைவான பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com