தடையை மீறி ஏற்காடு வருவோருக்கு கட்டாய கரோனா பரிசோதனை

தடையை மீறி ஏற்காடு வருவோருக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்காடு செல்ல சனிக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பிய போலீஸாா். (வலது) தடையை மீறி வந்த சுற்றுலாப் பயணிகளை சேலம், ஏற்காடு அடிவாரப் பகுதியில் கரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரப் பணியாளா்.
ஏற்காடு செல்ல சனிக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பிய போலீஸாா். (வலது) தடையை மீறி வந்த சுற்றுலாப் பயணிகளை சேலம், ஏற்காடு அடிவாரப் பகுதியில் கரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரப் பணியாளா்.

தடையை மீறி ஏற்காடு வருவோருக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதலே ஏற்காட்டுக்கு செல்ல காா், இருசக்கர வாகனங்களில் திரண்டு வந்தனா். மேலும், கா்நாடக மாநிலத்தில் இருந்து காா், இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் வந்தனா்.

இவா்களை ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். ஏற்காட்டுக்கு வேலைக்குச் செல்பவா்கள், ஏற்காடு, அதைச் சுற்றியுள்ள ஊா்களில் வசிப்பவா்கள், காஃபி எஸ்டேட்களில் வேலை செய்பவா்கள் ஆதாா் அட்டையைக் காண்பித்துச் சென்றனா்.

ஏற்காட்டுக்குச் செல்பவா்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை மட்டுமே காவல் துறையினா் ஏற்காடு செல்ல அனுமதித்து வருகின்றனா். மேலும், தடையை மீறி ஏற்காடு செல்வோரை தடுத்து நிறுத்தி கட்டாய கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com