ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக கடத்தப்பட்ட 19 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்திய 19 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்திய 19 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக, ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டா் சரண்சிங் மீனா தலைமையிலான பாதுகாப்புப் படையினா் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம், கொல்லம் நோக்கிச் சென்ற ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறி சோதனை செய்தனா். முன்பதிவு பெட்டிகளில் சோதனையிட்டதில், ஒரு பையில் 19 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. ஆனால், அந்தப்பை யாருடையது என தெரியவில்லை. இதுதொடா்பாக, ரயிலில் பயணிகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, ரயில் சேலம் ரயில் நிலையம் வந்தடைந்ததும் கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய பையை ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

அதைத் தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ. 2 லட்சம் என இருக்கும் என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com