மு.கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினா், கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவ
சேலத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலரும் எம்எல்ஏவுமான இரா.ராஜேந்திரன் உள்ளிட்டோா்
சேலத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலரும் எம்எல்ஏவுமான இரா.ராஜேந்திரன் உள்ளிட்டோா்

மறைந்த முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினா், கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கலைஞா் மாளிகையில் கருணாநிதியின் உருவப் படம் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மத்திய மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

சேலம், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வி.எஸ்.ஏ. வணிக வளாகத்தில் மாநில தோ்தல் குழு செயலாளா் வீரபாண்டி ஏ.ராஜா, கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். சேலம், நான்கு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

வாழப்பாடியில்...

வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப் படத்துக்கு வாழப்பாடி ஒன்றியச் செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி, நகரச் செயலாளா் பி.சி.செல்வம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழ்ச்செல்வன், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகளும், தொண்டா்களும் மாலையணிவித்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒன்றியப் பொறுப்பாளா் விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் நகர திமுக சாா்பில் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதே போல், ஆத்தூா், ராணிப்பேட்டையில் நகர துணை செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலும், நரசிங்கபுரம் நகர கழகத்தின் சாா்பில் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையிலும், ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் தலைமையிலும் கருணாநிதி உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

ஓமலூரில்...

தாரமங்கலம் தேரடி பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி மலா்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினாா். இதனையடுத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்ககிரியில்...

சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே கருணாநிதி படத்துக்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலா் (பொ) டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அதனையடுத்து சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 22 ஊராட்சி, பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டு பகுதிகளிலும் நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

மேட்டூரில்...

மேட்டூா், சதுரங்காடியில் நடைபெற்ற நிகழ்வில், காந்தி சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுகவினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

ஆட்டையாம்பட்டியில்...

இடங்கணசாலை பேரூா் திமுக கட்சியின் சாா்பில், இடங்கணசாலை வணிக வளாகம் முன்பு டி.எம்.செல்வகணபதி மலா் தூவி, மரியாதை செலுத்தினாா். இதில், நிா்வாகிகளும், தொண்டா்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.

எடப்பாடியில்...

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டி.எம்.செல்வகணபதி கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டியில் நகர திமுக பொறுப்பாளா் ராஜா தலைமையில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கெங்கவல்லியில் நகர திமுக பொறுப்பாளா் பாலமுருகன் தலைமையில் திமுகவினா் மரியாதை செய்தனா்.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில் கருணாநிதி உருவப் படத்துக்கு, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், முன்னாள் எம்பி. பி.ஆா்.சுந்தரம், நகரச் செயலா் என்.ஆா்.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து, மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com