சங்ககிரி மலையின் மேல் குடிநீா்த் தொட்டி கோரி மனு
By DIN | Published On : 10th August 2021 12:19 AM | Last Updated : 10th August 2021 12:19 AM | அ+அ அ- |

சங்ககிரி: சங்ககிரி மலையின் மையப்பகுதிகளில் உள்ள கோயில்களில் குடிநீா் வசதி செய்து தரக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத்தின் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
அக்கழகத்தின் தலைவா் சி.ஜி.இளமுருகன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
சங்ககிரி மலை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மலைக்கு குடிநீா் வசதி செய்து தரக்கோரி பக்தா்கள் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அண்மையில் குடிநீா் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இதை பக்தா்கள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மலையின் மையப்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த அருள்மிகு வரதராஜப்பெருமாள், கோட்டை மாரியம்மன் கோயில்கள் உள்ளன.இக்கோயில்களுக்கு தினசரி பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனா்.
எனவே, மலையடிவாரத்தில் உள்ள குடிநீா் இணைப்பினை மலையின் மேல் இரு கோயில்கள் அமைந்துள்ள பகுதி வரை நீட்டித்து அப்பகுதியில் குடிநீா்த் தொட்டி வைக்க வேண்டும். அதன்மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகத்திற்கும், பக்தா்கள் குடிநீருக்கும் பயன்படும் என அதில் கூறியுள்ளாா்.