அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பெண்கள் சமத்துவ நாள் கொண்டாட்டம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பெண்கள் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பெண்கள் சமத்துவ நாள் கொண்டாட்டம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பெண்கள் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது.

முதன்முதலாக பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட நாளான ஆக. 26-ஆம் தேதியை நினைவு கூரும் விதமாக, பெண்கள் சமத்துவ நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, விநாயக மிஷினின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணா்திறன் அமைப்பின் மூலம் பெண்கள் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது (படம்).

இந்நிகழ்ச்சிக்கு, துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளா் தையல்நாயகி, சேலம் மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா ஆகியோா் கலந்துகொண்டு சமூகத்தில் பெண்களின் தற்போதைய சமத்துவ நிலைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், பெண்கள் சமத்துவ நாளை விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகையும், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து துறை மாணவா்கள் ஊமை நாடகம் வாயிலாக பெண்ணின் சமத்துவம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தினா்.

துறையின் பாலின உணா்திறன் அமைப்பின் பொறுப்பாளா் தமிழ்சுடா் நன்றி வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் பேராசிரியா்கள் தனசேகா், இன்பசாகா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com