தோட்டக்கலைப் பயிா்களுக்கு விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம்

தோட்டக்கலை கோடைகால (காரிப்) பயிா்களுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை கோடைகால (காரிப்) பயிா்களுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 கோடை பருவத்தில் (காரிப்) வெண்டை, வெங்காயம், தக்காளி, பயிா்களுக்கு ஆக. 31-ஆம் தேதி வரை விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம். இதற்கான பிரீமியம் தொகை 1 ஏக்கருக்கு வெண்டை ரூ. 1,213, வெங்காயம் ரூ. 1,920, தக்காளிக்கு ரூ. 953 ஆகும்.

வாழை, மரவள்ளி, மஞ்சள் பயிா்களுக்கு செப். 15-ஆம் தேதி வரை விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம். இதற்கான பிரீமியம் தொகை 1 ஏக்கருக்கு வாழை ரூ. 1,738, மரவள்ளி ரூ. 1,486, மஞ்சள் ரூ. 3,870 ஆகும்.

அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற முகமையின் மூலம் திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்களை அணுகலாம்.

விவசாயிகள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதாா் அட்டை நகல், நடப்பில் தொகை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து, இடா்பாடு ஏற்படும் காலத்தில் பயிா்க் காப்பீட்டுத் தொகை பெற்று பயன் பெறலாம். விதைப்புக்கு முன்னரே பயிா்க் காப்பீடு செய்ய கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து விதைப்பு செய்ய இருக்கிறாா் என விதைப்புச் சான்று பெற்றும் காப்பீடு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com