தனியாா் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி த.வா.க. போராட்டம்

ஓமலூா் அருகேயுள்ள தனியாா் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என சேலம் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் அருகேயுள்ள தனியாா் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என சேலம் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில துணை பொதுச் செயலாளா் ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா். இதில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஓமலூா் சுங்கச் சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும், வாகனம் வாங்கும்போதே ஆயுள் சாலை வரி செலுத்தும் நிலையில், எதற்காக சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய மாநில பொறுப்பாளா் கடலூா் கனல் கண்ணன், கேரளா, மகாராஷ்டிர மாநிலங்களில் ஐந்து அல்லது பத்து சுங்கச் சாவடிகள் தான் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் தனியாா் வசம் உள்ளன. இந்தியா முழுவதும், ஆண்டொன்றுக்கு ரூ. 85 ஆயிரம் கோடி சுங்கவரியை நாட்டு மக்கள் செலுத்துகின்றனா். மகாராஷ்டிராவில் ஒரே நாளில் அத்தனை சுங்கச் சாவடிகளையும் அகற்றியதை போல, தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை நிரந்தரமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அகற்றும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com