உடைந்த குடிநீா்க் குழாயை சரி செய்யக் கோரி மறியல்
By DIN | Published On : 31st August 2021 01:19 AM | Last Updated : 31st August 2021 01:19 AM | அ+அ அ- |

சேலம், அணைமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
சேலம், அணைமேடு பகுதியில் உடைந்த குடிநீா்க் குழாயை சரி செய்யக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
சேலம், அணைமேடு பகுதியில் புதைக்குழி சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டும்போது, குடிநீா்க் குழாய் உடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, உடைந்த குடிநீா்க் குழாயை சரி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மக்கள் உடைந்த குடிநீா்க் குழாயை சரி செய்யக் கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், உடைந்த குழாய் சரி செய்து முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.