சங்ககிரியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு 

சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சங்ககிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
சங்ககிரியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றும் அமைச்சர் கே.என்.நேரு.
சங்ககிரியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றும் அமைச்சர் கே.என்.நேரு.

சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சங்ககிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொறுப்பு) டி.என்.செல்வகணபதி தலைமை வகித்தார். ஓன்றியச் செயலர் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ் வரவேற்றார். திமுக முதன்மை செயலரும், மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது: திமுக தலைவரும், தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் டிசம்பர் 11ம் தேதி சேலம் வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார். 

அந்நிகழ்ச்சியில் திமுகவினர் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடத்திலிருந்து பெறப்பட்ட 46 ஆயிரம் மனுக்களில் 30 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்களை முதல்வர் சேலத்தில் வழங்க உள்ளார்.  வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 

நகர்புற உள்ளாட்சியில் திமுக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்கள் இரண்டு தினங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றார்.  

சேலம் வடக்கு எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன்,  மாவட்ட அவைத்தலைவர் கோபால், மாவட்ட துணைச் செயலர்கள் சம்பத்குமார், க.சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, முன்னாள் பால்வளத்தலைவர் சின்னதம்பி, நகரச் செயலர் (பொறுப்பு) எல்ஐசி சுப்ரமணியன், மாவட்ட வழக்குரைஞர்கள் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர், துணை அமைப்பாளர்கள் ஆர்.அருள்பிரகாஷ், வி.என்.ராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com