தேவூர் அருகே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மக்கள் மறியல்

கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்குள்பட்ட செங்கானூர் கிராமத்தில் கான்கீரிட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊர் மக்கள் எடப்பாடியிலிருந்து கல்வடங்கம் செல்லும் பொன்னம்பாளையம் பிரிவு சாலை 
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மறியலில் ஈடுபட்ட மக்கள்.
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மறியலில் ஈடுபட்ட மக்கள்.

சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்குள்பட்ட செங்கானூர் கிராமத்தில் கான்கீரிட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊர் மக்கள் எடப்பாடியிலிருந்து கல்வடங்கம் செல்லும் பொன்னம்பாளையம் பிரிவு சாலை பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, செங்கனூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராம மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  கான்கிரீட்  சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.  அந்த சாலையை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதாக கூறப்படுகிறது.  

அதனையடுத்து அச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறை, பொதுப்பணித் துறையினரிடம் மனு அளித்துள்ளனர்.  மனு அளித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கோபமடைந்த ஊர்பொதுமக்கள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி  எடப்பாடியிலிருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் உள்ள பொன்னம்பாளையம் பிரிவு சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த வருவாய், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலைமறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com