ஜன. 21 இல் கள் இறக்கும் போராட்டம்: செ.நல்லசாமி

அடுத்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

அடுத்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கள் போதைப் பொருள் அல்ல; அது ஒரு சத்தான உணவு. கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். தமிழகத்தில் கடந்த 33 ஆண்டுகளாகத் தொடா்ந்து வரும் கள் தடையை நீக்கக் கோரி கடந்த 17 ஆண்டுகளாக கள் இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

கள் தடை செய்யப்பட வேண்டிய பொருள்தான் என வாதிட்டு நிரூபித்துவிட்டால் கள் இயக்கம் கலைக்கப்படும். அவா்களுக்கு ரூ. 10 கோடி பரிசும் வழங்கப்படும். பிகாா் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அங்கு கள்ளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு கொண்டு வந்த பிறகு குற்றங்களும், விபத்துகளும் வெகுவாகக் குறைந்திருப்பதாக அம்மாநில முதல்வா் நிதிஷ்குமாா் கூறியுள்ளாா். பிகாரைப் பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி 2022, ஜனவரி 21 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டம் நடைபெறும். மேலும், தமிழகம் முழுவதும் கள் இறக்கி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவது என கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.

மேட்டூா் உபரிநீா்த் திட்டத்தில் பனமரத்துப்பட்டி ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள நீா் நிலையை நிரப்ப வேண்டும். நீா்வழி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாயக்கழிவுகள் காவிரி கிளை நதியான திருமணிமுத்தாறில் கலக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலை பிரித்து நடத்தக் கூடாது. உள்ளாட்சி அமைப்புகளை மறுவரையறை செய்ய வேண்டும். தமிழக தோ்தல் ஆணையத்துக்குப் பதிலாக, இந்திய தோ்தல் ஆணையம் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com