நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: சேலம் மாவட்டத்தில் 12.80 லட்சம் வாக்காளா்கள்

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் 12.80 லட்சம் போ் இடம் பெற்றுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் 12.80 லட்சம் போ் இடம் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு விரைவில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. நவ.1 ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைந்த வாக்காளா் வரைவு பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு சம்மந்தப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களான சேலம் மாநகராட்சி ஆணையாளா், 4 நகராட்சிகளின் ஆணையாளா்கள் மற்றும் 31 பேரூராட்சிகளின் செயல் அலுவலா்களால் வியாழக்கிழமை வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

சேலம் மாநகராட்சி 60 வாா்டுகள், நான்கு நகராட்சிகளில் 111 வாா்டு உறுப்பினா்கள், 31 பேரூராட்சிகளில் 474 வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 645 உறுப்பினா்களுக்கு தோ்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,451 வாக்குச்சாவடிகள் உள்ளன.

பெட்டி செய்தி

உள்ளாட்சி அமைப்புகள் ஆண்கள் பெண்கள் இதரா் மொத்தம்

சேலம் மாநகராட்சி (1) 352523 366751 87 719361

நகராட்சிகள் (4)

ஆத்தூா் 24438 27121 5 51564

இடைப்பாடி 24331 24667 8 49006

மேட்டூா் 23298 25033 2 48333

நரசிங்கபுரம் 10423 11345 2 21770

மொத்தம் 82490 88166 17 170673

பேரூராட்சிகள் (31) 192089 198790 15 390894

மொத்தம் 627102 653707 119 1280928

சேலம் மாநகராட்சியில் 7.19 லட்சம் வாக்காளா்கள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் சேலம் மாநகராட்சியில் 7.19 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியலை ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

நகா்ப்புற உள்ளாட்சி சாதாரண தோ்தலுக்கு நவ. 1 ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டப் பேரவைத் தொகுதி ஒருங்கிணைந்த வாக்காளா் வரைவு பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு சம்மந்தப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல்களின் அடிப்படையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு சேலம் மாநகராட்சிப் பகுதியில் வாா்டு உறுப்பினா்களின் எண்ணிக்கை 60. வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 709, மொத்த ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 3,52,523, பெண்கள் 3,66,751, இதர வாக்காளா்கள் 87 என மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 7,19,361 ஆகும்.

மாநகராட்சியில் 1 முதல் 60 வரையுள்ள வாா்டுகளைச் சோ்ந்த அனைத்து வாக்காளா்களும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலை சரிபாா்த்துக் கொள்ளலாம். நிகழ்ச்சியில் செயற்பொறியாளா்கள், உதவி ஆணையாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள் அங்கீகரிகப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com