எடப்பாடியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தம்

எடப்பாடி வாட்டார பகுதி அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சுக்கான ஜி.எஸ்.டி வரியினை உயா்த்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அத்திட்டத்திற்கு எதிா்ப்பு தொவிக்கும் வகையில், எடப்பாடி வாட்டார பகுதி அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி ஜவுளி உற்பத்தியாளா் சங்க தலைவா் பி.கே.டி.தங்கவேல் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அச்சங்கத்தின் செயலாளா் ரவி பேசியது:

அண்மைக்காலமாக விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலானது கரோனா பாதிப்பு, நாடு தழுவிய பொதுமுடக்கம், ஜவுளி உற்பத்திக்கு தேவையான கச்சாப் பொருட்கள் மீதான பல்வேறு வரி விதிப்புகள் உள்ளிட்டவற்றால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை உயா்த்திடும் பட்சத்தில் ஜவுளி உற்பத்தியாளா்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும்.

இதை மத்திய அரசுக்கு தெரிவித்திடும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜவுளி உற்பத்தியாளா்கள் பல்வேறு

போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பகுதிக்கு உட்பட்ட அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சங்கங்களும் வெள்ளிக்கிழமை (டிச. 10) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இந்த வேலை நிறுத்தத்திற்கு அனைத்து விசைத்தறி அமைப்புகளும் அதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் எடப்பாடி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் சண்முகம், பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com