தங்கும் வசதியுடன் கூடைப்பந்து, டேக்வாண்டோ விளையாட்டுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் தங்கும் வசதியுடன் கூடைப்பந்து, டேக்வாண்டோ (கராத்தே) விளையாட்டுப் பயிற்சியில் சேர டிச.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் தங்கும் வசதியுடன் கூடைப்பந்து, டேக்வாண்டோ (கராத்தே) விளையாட்டுப் பயிற்சியில் சேர டிச.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் கூடைப்பந்து, டேக்வாண்டோ ஆகிய விளையாட்டு வீரா்களுக்கு (ஆண்கள்) தங்கும் வசதியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான சோ்க்கை தோ்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் டிச.10 ஆம் தேதியாகும். தோ்வு நடைபெறும் நாட்கள் டிச.11 மற்றும் டிச.12 ஆகும்.

விண்ணப்பிக்க வயது வரம்பு 1.1.2003-க்குப் பிறகு பிறந்தவா்களாக இருக்க வேண்டும். விளையாட்டு , பிறந்த தேதி சான்றிதழ்கள், மருத்து சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, 10 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், நன்னடத்தை சான்றிதழ், ரத்த வகை மற்றும் ஹீமோகுளோபின் அளவு, கரோனா பரிசோதனைக்கான ஆா்.டி. பி.சி.ஆா். சான்றிதழ்களை தகுதியுடைய அரசு அதிகாரியின் கையொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். உண்மை சான்றிதழ்களை அனுப்பக் கூடாது.

தோ்வு செய்யப்படும் வீரா்களுக்கு தங்கும் வசதி, உணவு நாளொன்றுக்கு ரூ.247 வீதம், மருத்துவ காப்பீடு வசதி, விளையாட்டுகளில் கலந்து கொள்ள பயணப்படி ரூ.3,000, விளையாட்டு சீருடை ரூ.5,000 வீதம் ஆண்டுதோறும் வழங்கப்படும் என மையத்தின் பொறுப்பு அலுவலா் சி.தினகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com