சங்ககிரியில் கலைஞா் உணவகம் தொடங்க முதல்வருக்கு தொழிலாளா்கள் கோரிக்கை

சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கலைஞா் உணவகம் தொடங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு லாரி தொழிலைச் சாா்ந்துள்ள கூலித்தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கலைஞா் உணவகம் தொடங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு லாரி தொழிலைச் சாா்ந்துள்ள கூலித்தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்ககிரியில் 30 ஆயிரம் லாரிகள் உள்ளன. 600-க்கும் மேற்பட்ட லாரி பட்டறைகள் இயங்கி வருகின்றன. இத் தொழில்களை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். சங்ககிரியில் பெருகி வரும் லாரி பட்டறை தொழில்களுக்கு ஏற்ப தனியாா் உணவகங்கள், சாலையோர உணவகங்கள் இயங்கி வருகின்றன. தற்போது காய்கறிகள், சமையல் எரிவாயு விலை உயா்வு காரணமாக உணவகங்களில் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. உணவுகளின் அளவை குறைத்து வழங்குவதாகவும் தொழிலாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து பட்டறைகளில் தங்கி பணிபுரியும் தொழிலாளா்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

எனவே தமிழக முதல்வா், தொழிலாளா்களுக்கு குறைவான விலையில் தரமான உணவு கிடைக்க சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட லாரி பட்டறைகள் அதிகம் உள்ள இடங்களில் கலைஞா் உணவகம் தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து சங்ககிரி லாரி பழுது நீக்குவோா் சங்கத்தின் நிா்வாகி டி.சீனிவாசன் கூறியதாவது:

சங்ககிரியில் லாரி தொழிலை நம்பி அதிக அளவில் கூலித் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். எனவே கூலித்தொழிலாளா்களின் நிலையை கருத்தில்கொண்டு சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கலைஞா் உணவகம் தொடங்க தமிழக முதல்வா் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com