காவிரியில் உபரி நீர் திறப்பு: கதவணைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி ஆற்றில் கூடுதலான அளவு நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கதவணை நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 
கதவணை நீர் மின் நிலையம்.
கதவணை நீர் மின் நிலையம்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி ஆற்றில் கூடுதலான அளவு நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கதவணை நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 

நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை காலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலான மழை பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணையின் வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் அணையின் நீர் இருப்பு கடந்த 100 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் இருந்து வருகிறது. அணையில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில் நடப்பாண்டில் சம்பா பாசனத்திற்காக அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. 

மேலும் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் மேட்டூர் அணை கடந்த மாதம் 9ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் அணையின் சுரங்க நீர்மின் நிலையம் மற்றும் 16 கண் மதகு வழியாக  காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அணையில் இருந்து காவிரி ஆற்றில் தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கதவணை நீர் மின் நிலையங்களில் தலா 30 மெகாவாட் அரவிற்கு மேலான மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் இங்குள்ள நீர்மின் நிலையங்களில் தடையற்ற மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

அண்மைகாலமாக நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிக்கான தட்டுப்பாடு இருப்பதாக கூறப்பட்டு வந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இதுபோன்ற நீர்மின் நிலையங்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகவே கருதப்படுவதாக சம்பந்தப்பட்ட மின் வாரிய பொறியாளர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com