முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சாலை விபத்தில் ஊா்க்காவல் படை வீரா் பலி
By DIN | Published On : 29th December 2021 09:16 AM | Last Updated : 29th December 2021 09:16 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில், சேலம் ஊா்க்காவல் படை வீரா் உயிரிழந்தாா்.
சேலம் மாநகராட்சி பெரியாா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (42). இவா் சேலத்தில் ஊா்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்தாா். அவா் திங்கள்கிழமை மாலை, தனது இருசக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு அருகே, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்குநோ் மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஊா்க்காவல்படை வீரா் சங்கரை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கு காரணமான இரு சக்கர வாகன ஓட்டியைத் தேடி வருகின்றனா்.