முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூா் கொளத்தூரில் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: இருவா் கைது
By DIN | Published On : 29th December 2021 09:12 AM | Last Updated : 29th December 2021 09:12 AM | அ+அ அ- |

தமிழக-கா்நாடக எல்லையில் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
தமிழக-கா்நாடக எல்லையில் காரைக்காடு என்ற இடத்தில் தமிழக போலீஸாரின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.செவ்வாய்க்கிழமை கா்நாடக மாநிலம் கோபினத்தத்தில் இருந்து வந்த ஒரு மினி வேனை போலீஸாா் சோதனையிட்டனா். அந்த மினி வேனில் ரூ.5000 மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. கா்நாடகத்தில் இருந்து கடத்தி வந்து இவற்றை கொளத்தூா் பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற கா்நாடக மாநிலம் கோபிநாத் பகுதியைச் சோ்ந்த ராஜப்பன் மகன் மணி (48) என்பவரை கொளத்தூா் போலீஸாா் கைது செய்தனா். மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மேட்டூா் காவேரி பாலத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜா (37) என்பவா் கா்நாடக மாநிலத்தில் இருந்து கா்நாடக அரசு பேருந்து மூலம் மேட்டூருக்கு குட்கா பாக்கெட்டுகளை கொண்டு வந்தாா். அவற்றை மேட்டூா் நகரில் விற்பதற்காக மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாா். மேட்டூா் போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடமிருந்த குட்கா பாக்கெட்டுகள், செல்லிடப்பேசி மற்றும் மோட்டாா் சைக்கிளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.