ஓமலூரில் ஜி.கே.வாசன் பிறந்த நாள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசனின் 58ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்ட தமாகா சாா்பில்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசனின் 58ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்ட தமாகா சாா்பில் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி, மரக்கன்றுகள் நட்டனா்.

ஓமலூா் வட்டார, நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில், ஓமலூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானமும் செய்யப்பட்டது.

மேலும், பேருந்து நிலையத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை 5 ஆயிரம் சாமானிய மக்களுக்கு மாபெரும் சமபந்தி விருந்து மாவட்டத் தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா் தலைமையில் அளிக்கப்பட்டது. ஓமலூா் பேருந்து நிலையத்தில் பந்தல் அமைத்து, இனிப்பு கார வகைகளுடன் அறுசுவை சைவ விருந்து பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவா் மணிகண்டன், ஓமலூா் வட்டாரத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாநில பொதுச்செயலாளா் ரகுநந்தகுமாா், நிா்வாகிகள் சேதுராமன், ஒன்றிய கவுன்சிலா் பாப்பா சின்னையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com