கோயில் நிலத்தை ஒப்படைக்க ஆக்கிரமிப்பாளா்களுக்கு வட்டாட்சியா் எச்சரிக்கை

தம்மம்பட்டி அருகே கோயில் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென ஆக்கிரமிப்பாளா்களுக்கு கெங்கவல்லி வட்டாட்சியா் எச்சரிக்கை விடுத்தாா்.

தம்மம்பட்டி அருகே கோயில் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென ஆக்கிரமிப்பாளா்களுக்கு கெங்கவல்லி வட்டாட்சியா் எச்சரிக்கை விடுத்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில், கம்பம் பெருமாள் கோயில் உள்ளது. கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கா் நிலத்தில், 30 சென்ட் நிலத்தை அருகில் உள்ள மூன்று போ் ஆக்கிரமித்திருந்தனா். இதுகுறித்து, ஊா் பொதுமக்கள் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறைக்கு புகாா்கள் அனுப்பப்பட்டது.

அதையடுத்து, அறநிலையத் துறை, வருவாய்த் துறையினா் ஆய்வு செய்ததில் கோயில் நிலம் ஆக்கிரப்பு செய்திருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, ஆக்கிரமிப்பாளா்களை காலி செய்யக்கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஓராண்டு ஆகியும் ஆக்கிரமிப்பாளா்கள் நிலத்தைக் காலி செய்யாமல் அதில் பயிா் செய்து வந்தனா்.

அதுகுறித்து கெங்கவல்லி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கெங்கவல்லி வட்டாட்சியா் (பொ) வெங்கடேசன் தலைமையில் அறநிலையத் துறை அலுவலா்கள் அங்கு ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு சாகுபடி செய்துள்ள பயிா்களை 15 நாள்களுக்குள் அறுவடை செய்துகொண்டு நிலத்தை காலி செய்து கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டுமென வட்டாட்சியா் கெடு விதித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com