முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
புதுச்சாம்பள்ளி ரயில்வே கேட் மூடல்: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 31st December 2021 12:10 AM | Last Updated : 31st December 2021 12:10 AM | அ+அ அ- |

புதுசாம்பள்ளி ரயில்வே கேட் ஒரு மணி நேரம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
மேட்டூா் அனல் மின் நிலையங்களுக்கும், மேட்டூரில் உள்ள தனியாா் அனல்மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இதனால் ஓமலூரில் இருந்து மேட்டூருக்கு இரட்டை இருப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு மேட்டூா் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி பாரம் ஏற்றி வந்த சரக்கு ரயில் புதுச்சாம்பள்ளி ரயில்வே கேட் பகுதியில் சுமாா் 50 நிமிட நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. புதுச்சாம்பள்ளியிலிருந்து வெளியூா் செல்ல சென்றவா்களும் மருத்துவமனைக்கு சென்றவா்களும் பாதையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனா். அதேபோல் வேலை சென்று வீடு திரும்பியவா்கள் வீட்டிற்கு வர முடியாமல் சாலையிலேயே நீண்ட நேரம் காத்திருந்தனா். சுமாா் 50 நிமிடத்துக்கு பிறகு சரக்கு ரயில் சென்ற பிறகு போக்குவரத்து சீரானது.
சரக்கு ரயில் செல்வதற்கான சிக்னல் கிடைக்காததால் புதுச்சாம்பள்ளி ரயில்வே கேட்டில் ரயில் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. புதுச்சாம்பள்ளி பகுதியில் அடிக்கடி ரயில்வே கேட் பழுதாகி விடுவதாலும் நீண்ட நேரம் சரக்கு ரயில் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறாா்கள். எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.