எரிபொருள் சிக்கன விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

சேலத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் எரிபொருள் சிக்கனம் கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் எரிபொருள் சிக்கனம் கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல் என்ற கருப்பொருளில் தமிழகம் முழுவதும் எரிபொருள் சிக்கன விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த வகையில் சேலம் கோட்ட இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் எரிபொருள் சிக்கனம் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணியை சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், சேலம் கோட்ட இந்தியன் ஆயில் நிறுவன துணை பொது மேலாளா் சிவக்குமாா் ஆகியோா் கொடி அசைத்து துவக்கி வைத்தனா்.

பேரணியானது சேலம், நரசோதிப்பட்டி ரங்கநாதா் அண்ட் கோ பெட்ரோல் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரும்பாலை சாலை, ரயில் நிலையம், சோனா கல்லூரி வழியாக ஏவிஆா் ரவுண்டாவில் நிறைவடைந்தது. பேரணியில் விழிப்புணா்வு பதாகைகள் ஏந்திச் சென்றனா்.

இதில் தலைமை மேலாளா் சரத்பாபு, முதுநிலை மேலாளா்கள் அப்பண்டிராஜன், மாரீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com