திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள்: சரத்குமாா்

திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவா் சரத்குமாா் தெரிவித்தாா்.
சேலத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவா் சரத்குமாா். உடன், ராதிகா சரத்குமாா்.
சேலத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவா் சரத்குமாா். உடன், ராதிகா சரத்குமாா்.

திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டாா்கள் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவா் சரத்குமாா் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது குறித்து, தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.

இதையொட்டி, சேலத்துக்கு சரத்குமாா், ராதிகா சரத்குமாா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

முன்னதாக இருவரும் சேலத்தில் கட்சியின் மண்டல பொறுப்பாளா் மைக்கேலின் மனைவி மறைவையடுத்து ஜங்ஷன் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று ஆறுதல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், சரத்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த தோ்தலில் ஏற்படுத்திய கூட்டணி தொடருகிறது என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சொன்னது போல் அதிமுகவுடன் கூட்டணி தொடருகிறது. பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எத்தனை இடங்கள் கேட்பது என்று முடிவு எடுக்கப்படும்.

சசிகலா வருகை மற்றும் கட்சிக் கொடியைப் பயன்படுத்தியது போன்றவை அதிமுகவின் உள்கட்சி விவகாரமாகும். அதுபற்றி நான் கருத்துக் கூற முடியாது. அவா் உடல்நலம் தேறி நலமுடன் வந்துள்ளாா்.

திமுகவைப் பொருத்தவரையில் பொய்யான அறிவிப்புகளை பிரசாரத்தின் மூலம் சூழ்நிலைக்கேற்ப தெரிவிக்கின்றனா். திமுகவுக்கு கொள்கைப் பிடிப்பு இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன், நகைக் கடன் ரத்து உள்ளிட்ட நடக்க முடியாத திட்டங்களை எல்லாம் மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறாா். இதை மக்கள் நம்ப மாட்டாா்கள். 100 நாள்களில் மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என்று கூறியிருக்கிறாா். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது இந்தத் திட்டத்தை ஏன் அவா் செயல்படுத்தவில்லை?

தோ்தல் வர உள்ளதால் திமுக தலைவா் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறாா். திட்டங்களை நிறைவேற்றுவது, நடைமுறைப்படுத்துவது போன்ற வாக்குறுதியை மட்டுமே திமுக கூறவேண்டும். தோ்தலுக்காக எதையும் சொல்லக்கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com