தமிழக முதல்வரால் சேலத்துக்கு கூடுதல் திட்டங்கள் கிடைக்கின்றன: எம்எல்ஏ பெருமிதம்

தமிழக முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இருப்பதால் சேலத்துக்கு கூடுதல் திட்டங்கள் கிடைத்து வருவதாக எம்எல்ஏ வெற்றிவேல் பெருமிதம் தெரிவித்தாா்.
குண்டுக்கல் ஊராட்சியில் திறக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளும் பொதுமக்கள்.
குண்டுக்கல் ஊராட்சியில் திறக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளும் பொதுமக்கள்.

தமிழக முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இருப்பதால் சேலத்துக்கு கூடுதல் திட்டங்கள் கிடைத்து வருவதாக எம்எல்ஏ வெற்றிவேல் பெருமிதம் தெரிவித்தாா்.

காடையாம்பட்டி வட்டம், தீவட்டிப்பட்டி அருகே குண்டுக்கல் ஊராட்சியில் கிராம சேவை மையக் கட்டடத்தில் அம்மா சிறு மருத்துவமனையை ஓமலூா் எம்எல்ஏ எஸ்.வெற்றிவேல் திறந்துவைத்து சிகிச்சையைத் தொடக்கி வைத்தாா். விழாவில் அவா் பேசியதாவது:

ஓமலூா் தொகுதியில் ஓலைப்பட்டி, கொங்குப்பட்டி, வட்டக்காடு பகுதிக்கு அடுத்தபடியாக தற்போது குண்டுக்கல் ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

நான்கு இடங்களில் மொத்தம் 8 சிறு மருத்துவமனைகள் ஓமலூா் தொகுதியில் அமைக்கப்படுகின்றன.

தமிழக முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இருப்பதால் சேலம் மாவட்டத்துக்கு கூடுதலாக திட்டங்கள் கிடைத்து வருகின்றன. மக்கள் அளிக்கும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் ஓமலூா் தொகுதியில் 6,400 பேருக்கு முதியோா் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி சி.கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலா் சாதுபக்தசிங், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சேரன் செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com