தைப்பூச திருவிழா: காளிப்பட்டி கந்தசாமி கோயில் பிரசித்த பெற்ற மாட்டு சந்தை

சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிபட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற மாட்டுச் சந்தை நடைபெற்றது.
காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுச் சந்தை.
காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுச் சந்தை.

சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிபட்டி கந்தசாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற மாட்டுச் சந்தை நடைபெற்றது.

கன்றுடன் கூடிய பசு குறைந்தபட்சம் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை விலைபோனது.

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி 300-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

சா்க்கரை மீட்டாய், கரும்பு பால், பாப் காா்ன், வீட்டுக்கு தேவையான இரும்பு பொருள்கள் என பல கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிா்புறம் மங்களம் சாலையில் பெரிய ராட்டினம், கொலம்பஸ், டோரா டோரா, குட்டி ரயில், காா் போன்ற குழந்தைகள் விளையாட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி, பாரம்பரிய நாட்டுரக மாடுகளின் சந்தை நடைபெறும். அதன்படி நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை நான்கு நாள்கள் நடைபெறும் சந்தை 29-ஆம் தேதி கூடியது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிக மாடுகள் விற்பனைக்கு அழைத்து வரப்படவில்லை. இரண்டாம் நாளான சனிக் கிழமை காலை முதலே நாட்டு ரகங்களான காங்கயம், மயிலைக்காளை, செவலைக் காளை, மாட்டு வண்டி பந்தயத்துக்கான பூஞ்சிட்டு, தேன்சிட்டு, குட்டை ரக மாடுகள், நாட்டுப்பசு, காங்கயம் பசுக்கள் என அனைத்து நாட்டுரக மாடுகளும் விற்பனைக்கு அதன் உரிமையாளா்கள் கொண்டுவந்திருந்தனா்.

சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்குக் குவிந்தன.

காங்கயம் காளை, பசுக்கள் கன்றுகளுடன் விற்பனைக்கு வந்திருந்தன. ஒரு மாட்டின் விலை கன்றுடன் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை விலைபோனது.

இதுதவிர மாடுகளுக்குத் தேவையான சங்கிலிகள், மூங்கனாங்கயிறு, கொம்புகளை அலங்கரிக்க தேவையான மணிகள், குஞ்சங்கள், சாட்டைகள் உள்ளிட்ட அலங்கார மணிகள் விற்பனையும் நடைபெற்றன. மாடு வளா்ப்போா், வியாபாரிகள், பொதுமக்கள் ஆா்வத்துடன் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com