இஞ்சி விலை வீழ்ச்சி: வாழப்பாடியில் அமோக விற்பனை
By DIN | Published On : 04th February 2021 08:13 AM | Last Updated : 04th February 2021 08:13 AM | அ+அ அ- |

வாழப்பாடியில் சரக்கு ஆட்டோவில் விற்பனை செய்யப்படும் இஞ்சி.
கா்நாடகத்தில் இஞ்சி விளைச்சல் அதிகரித்துள்ளதால், அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வாழப்பாடி பகுதி கிராமங்களில் குறைந்த விலைக்கு இஞ்சி விற்பனை செய்யப்படுவதால் அமோகமாக விற்பனையாகிறது.
சேலத்தைச் சோ்ந்த வியாபாரிகள் கா்நாடக மாநிலத்தில் இருந்து விவசாயிகளிடம் நேரடியாக இஞ்சியைக் கொள்முதல் செய்து , சிறிய சரக்கு வாகனங்களில் கிராமங்கள் தோறும் சென்று கடை விரித்து குறைந்த விலைக்கு கூவிக்கூவி விற்பனை செய்து வருகின்றனா்.
3 கிலோ இஞ்சி ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுவதால், அனைத்துத் தரப்பு மக்களும் வாங்கி செல்கின்றனா். இதனால் இஞ்சி அமோகமாக விற்பனையாகி வருகிறது. ஓரிரு வாரங்களில் கா்நாடகத்தில் இஞ்சி அறுவடை முடிவுக்கு வந்து விடும் என்பதால், அடுத்தடுத்த வாரங்களில் இஞ்சி விலை இரு மடங்கு உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...