சூரியஒளி மின்வேலி மானியத்தில் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 04th February 2021 08:11 AM | Last Updated : 04th February 2021 08:11 AM | அ+அ அ- |

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி மானியத்தில் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் தனிநபா் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத விளைபொருள்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியை ரூ. 3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2020-21ஆம் நிதியாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட அறிவிக்கப்பட்டது.
சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால் விலங்குகள், வேட்டைக்காரா்கள், அன்னியா்களுக்கு மின் வேலியில் செலுத்தப்படும் உயா்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின்அதிா்ச்சியினால் அசௌகரியம் ஏற்பட்டு விளை பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்படாமலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமலும் கிடைத்திட வகை செய்யும்.
விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியை 5 வரிசை (ரூ. 250/மீ) 7 வரிசை (ரூ. 350/மீ) அல்லது 10 வரிசை (ரூ. 450/மீ) அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம்.
தனிநபா் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் அல்லது 1245 மீட்டா் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.
மேலும், சூரிய ஒளி மின்வேலி அமைப்பிற்கான செலவுத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2.18 லட்சம் மானியம் வழங்கிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனைத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதால், இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதாா் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கீழ்கண்ட அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
செயற் பொறியாளா், (வேளாண் பொறியியல் துறை) குமாரசாமிப்பட்டி, சேலம்.7 0427-2906266.
உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) குமாரசாமிப்பட்டி, சேலம். 7 0427-2906277.
உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) கோனூா் அஞ்சல், குஞ்சாண்டியூா், மேட்டூா் 04298-230361.
உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) 60அடி சாலை, காந்திநகா், ஆத்தூா் 04282-290585.
உதவி செயற் பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) ராமகிருஷ்ணா காம்ப்ளக்ஸ், சேலம் பிரதானை சாலை, சங்ககிரி 04283-290390. இந்த அலுவலகங்களை தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.