10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவா் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
By DIN | Published On : 06th February 2021 08:20 AM | Last Updated : 06th February 2021 08:20 AM | அ+அ அ- |

பத்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை கேரள மாநில தொண்டு நிறுவனத்தினா் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பத்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை கேரள மாநில தொண்டு நிறுவனத்தினா் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மகுடஞ்சாவடி அருகே உலகப்பனூா், காளியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த சின்னையன் மகன் செல்வம் (40). இவா் லாரியில் உதவியாளராக வேலை செய்து வந்தாா். அவருக்கு திருமணமாகவிலை.
இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு லாரியில் வேலைக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. தாய் காளியம்மாள், தங்கை மல்லிகா மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் கேரள மாநிலத்தில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் செல்வத்தை ஒப்படைத்தனா். அதன் பின்னா் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் செல்வம் குடும்பத்திரை வரவழைத்து அவரை ஒப்படைத்தனா்.