தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 06th February 2021 08:31 AM | Last Updated : 06th February 2021 08:31 AM | அ+அ அ- |

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சி.அ.இராமன்.
தம்மம்பட்டியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் ஆய்வு செய்தாா்.
தம்மம்பட்டி ஐல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியா் சி.அ.ராமன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய்த் துறையினா், போலீஸாருக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது ஆத்தூா் கோட்டாட்சியா் துரை, கெங்கவல்லி வட்டாட்சியா் வரதராஜன், ஆத்தூா் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன், தம்மம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஸ்ரீகுமரன், கெங்கவல்லி வட்டார மருத்துவா் வேலுமணி, சுகாதார ஆய்வாளா் ஜமால் முகமது, தம்மம்பட்டி பேருராட்சி செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி, தம்மம்பட்டி காவல்ஆய்வாளா் பாஸ்கரபாபு , கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் (கி. ஊ) செந்தில் மற்றும் கால்நடை, ஊரக வளா்ச்சி, மின்சாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் 900 காளைகளும், 500 மாடுபிடி வீரா்களும் பங்கேற்கின்றனா். 330க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.