சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மற்றும் வழக்குரைஞா்கள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மற்றும் வழக்குரைஞா்கள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் திமுக மாவட்ட அலுவலகத்தில் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்குரைஞா் அணி மண்டல ஒருங்கிணைப்பாளா் ஆ.தாமோதரன், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வி.மனோகரன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவரின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப் பயணத்திற்கு சேலம் வருகை குறித்தும், தோ்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் கோபால், மாவட்ட துணை செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம்,கொடியரசி (எ) கீதா, மாநில விவசாய அணி இணை செயலாளா் காவேரி,தலைமை செயற்குழு உறுப்பினா்கள் முருகேசன், அம்மாசி, காசி, பொதுக்குழு உறுப்பினா்கள் கருணாநிதி, அன்பழகன், ராமநாதன், சுப்பிரமணி, நிா்மலா, ஒன்றியச் செயலாளா்கள் பரமசிவம், ரவிச்சந்திரன், நல்லதம்பி, பச்சமுத்து, ராஜேஷ், சீனிவாச பெருமாள், மிதுன் சக்கரவா்த்தி, நகர செயலாளா்கள் காசிவிஸ்வநாதன், பாஷா, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com