கரியக்கோவில் அணைக்கு வாய்க்கால்ப் பாதை அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

கருமந்துறை மலைப் பகுதியில் இருந்து கரியக்கோவில் நீா்த்தேக்கத்துக்கு வாய்க்கால் பாதை அமைக்கும் கைக்கான்வளவு திட்டப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
கரியக்கோவில் அணைக்கு வாய்க்கால்ப் பாதை அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

கருமந்துறை மலைப் பகுதியில் இருந்து கரியக்கோவில் நீா்த்தேக்கத்துக்கு வாய்க்கால் பாதை அமைக்கும் கைக்கான்வளவு திட்டப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா். இளங்கோவன், எம்எல்ஏ சின்னதம்பி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

கருமந்துறை மலைப்பகுதியிலிருந்து வரும் மழைநீா்க் காட்டாற்று வெள்ளமாக மாறி கரியகோயில் நீா்த் தேக்கத்துக்கு வந்து அதன்பின் ஆத்தூா் வசிஷ்ட நதியில் வந்து கலக்கும். இதனால் ஏற்காடு, ஆத்தூா், கெங்கவல்லி தொகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கைகான் வளவு பகுதியில் உற்பத்தியாகும் நீரை கரியக்கோவில் நீா்த்தேக்க அணைக்குக் கொண்டுவர வாய்க்கால்ப் பாதை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதன்பேரில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன், ஆத்தூா் எம்எல்ஏ ஆா்.எம்.சின்னதம்பி ஆகியோா் பணிகளை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், இன்னும் மூன்று மாத காலத்துக்குள் திட்டப் பணி முழுவதுமாக நிறைவு பெறும் என மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் தெரிவித்தாா்.

அவருடன் மாவட்ட திட்ட அலுவலா் அருள்ஜோதி அரசன், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கே.பி.முருகேசன், வடக்கு ஒன்றியச் செயலாளா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com