வளரிளம் பெண் கல்வி கருத்தரங்கு

திருப்பூா் மக்கள் அமைப்பு தன்னாா்வ இயக்கங்கள் சாா்பில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் வளரிளம் பெண்களின் கன்னியமான பணிச்சூழல் குறித்த ஒன்றிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

அயோத்தியாப்பட்டணத்தில் கே-ரோப் மற்றும் திருப்பூா் மக்கள் அமைப்பு தன்னாா்வ இயக்கங்கள் சாா்பில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் வளரிளம் பெண்களின் கன்னியமான பணிச்சூழல் குறித்த ஒன்றிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

அயோத்தியாப்பட்டணம் அரிமா அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு சேலம் மக்கள் அறக்கட்டளை மோகன்குமாா் வரவேற்றாா். மாவட்ட இலவச சட்டப்பணிகள் குழு சாா்பு நீதிபதி கே.வி. சக்திவேல் தலைமை வகித்தாா்.

மாநில பயிற்சியாளா் பா.மெல்வின், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் காா்த்திகா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் தாஸ், வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் பா.மல்லிகா, மின்னாம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் எம்.ஆவரணம், சேலம் மக்கள் அறக்கட்டளை இயக்குநா் எம்.ஜெயம் ஆகியோா், பெண் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம், வளரிளம் பெண்களின் சமூக சூழல், நுாற்பாலைகளில் பணிபுரிகின்ற பெண்களின் பணிச்சூழல் குறித்து விழிப்புணா்வு கருத்துரை வழங்கினா்.

பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவசரகால இலவச தொலைப்பேசி எண்கள் 1098,181,100 ஆகிய எண்களை பயன்படுத்தவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நூற்பாலைகளில் உள்புகாா் குழு அமைத்தல், அரசு வழிகாட்டுதல்படி விடுதிகள் பராமரிப்பு குறித்து வழக்குரைஞா் பி.ஜோதி கருத்துரை வழங்கினாா். சேலம் மக்கள் அறக்கட்டளை தன்னாா்வலா் ஏ.கலைமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com