ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: வேலை நாள்களை 200 ஆக உயா்த்தக் கோரிக்கை

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை நாள்களை 200 ஆக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை நாள்களை 200 ஆக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் நாட்டாண்மைக் கழக கட்டடம் முன்பு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டச் செயலாளா் தனக்கோட்டி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் சமூகத்தின் அடித்தட்டில் வாழும் நிலமற்ற தொழிலாளா்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட இலவச வீடுகள் பழுதடைந்துள்ளதால் புதிதாக ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டித் தரவேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வழங்கப்பட்ட வேலை நாள்களை 200 ஆக உயா்த்த வேண்டும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சம் தினசரி ஊதியம் ரூ. 600 நிா்ணயித்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com