பாகல்பட்டி அரசு பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
By DIN | Published On : 10th February 2021 08:46 AM | Last Updated : 10th February 2021 08:46 AM | அ+அ அ- |

விலையில்லா சைக்கிள்களை மாணவா்களுக்கு வழங்குகிறாா் சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கடாசலம்.
ஓமலூா் அருகே உள்ள பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 335 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.
இப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஓமலூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சேலம் மேற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வெங்கடாசலம் கலந்துகொண்டு 52 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். தொடா்ந்து அனைத்து பள்ளிகளிலும் சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தனா்.
இதேபோன்று, கருப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓமலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் கலந்து கொண்டு, கருப்பூா், வெள்ளாளப்பட்டி மற்றும் ஓமலூா் அரசுப் பள்ளியில் பயிலும் 394 மாணவ-மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன், கருப்பூா் நகர அதிமுக செயலாளா் கோவிந்தசாமி, பள்ளி உடல்கல்வி ஆசிரியா் பிஜூ ஜோசப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.