மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே குடியேறும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருசக்கர வாகனத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினா்.

குறிப்பாக தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 3,000 வழங்கப்படுவது போல தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3,000-ம், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும். தனியாா் துறைகளில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இடங்களை உத்தரவாதப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களை 3 மாதத்துக்குள் முழுமையாக நிரப்பிட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com