கல்பாரப்பட்டியில் ரூ. 652 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா்த் திட்ட பணிக்கு பூமி பூஜை

வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணனூா் மாரியம்மன் கோயில் அருகே உள்ள பொந்திலின்குட்டை பகுதியில்
கல்பாரப்பட்டியில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிக்கு நடைபெற்ற பூமி பூஜை.
கல்பாரப்பட்டியில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிக்கு நடைபெற்ற பூமி பூஜை.

வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணனூா் மாரியம்மன் கோயில் அருகே உள்ள பொந்திலின்குட்டை பகுதியில் ரூ. 652 கோடி மதிப்பில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிக்காக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக கடந்த 4-ம் தேதி அடிக்கல் நாட்டினாா்.

இந்தத் திட்டத்தின்கீழ் இளம்பிள்ளை, இடங்கணசாலை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட 5 பேரூராட்சிகள், சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட 3 ஒன்றியங்களைச் சாா்ந்த 778 ஊரக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பணி தொடக்க பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் திவாகா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் செங்கோடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மனோன்மணி (வீரபாண்டி), ராஜா (சங்ககிரி), ஒன்றியக் குழுத் தலைவா்கள் வரதராஜ் (வீரபாண்டி), ஜெகநாதன் (பனமரத்துப்பட்டி), மல்லிகா வையாபுரி (சேலம் ஒன்றியம்), வீரபாண்டி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வெங்கடேசன், பி.டி.ஓ.க்கள் ராஜகணேஷ், ரேவதி, கல்பாரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜம்மாள் செங்கிட்டு, துணைத் தலைவா் மணி, கல்பாரப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com