வாழப்பாடி கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.45 கோடிக்கு பருத்தி விற்பனை

வாழப்பாடி கிளை வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை ரூ. 1.45 கோடிக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

வாழப்பாடி கிளை வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை ரூ. 1.45 கோடிக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழப்பாடி கிளையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பருத்தி, நிலக்கடலை, மஞ்சள், தேங்காய் கொப்பரை உள்ளிட்ட விளை பொருள்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 821 க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5,600 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். 38 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

குவிண்டால் ஆா்.சி.எச். ரக பருத்தி தரத்திற்கேற்ப ரூ. 7,019 முதல் ரூ. 9,249 வரையும், டி.சி.எச்.ரக பருத்தி ரூ. 5,879 முதல் ரூ. 7,169 வரையும் விலை போயின. மொத்தம் ரூ. 1.45 கோடிக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com