புதிய பேருந்து நிலையத்தில் 40 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த 40 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த 40 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.இதனிடையே பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அனுமதி பெறாமல் பல கடைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தக் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தையும் அகற்றி அதன் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனா்.

இதையடுத்து சேலம் மாநகராட்சி செயற்பொறியாளா் (திட்டம்) பழனிசாமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா்.

பின்னா் பேருந்து நிலையம் முழுவதும் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 40 கடைகளை அகற்றினா். சூரமங்கலம் உதவி ஆணையா் நாகராஜன், பள்ளப்பட்டி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இவா்களை மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்து கடைகளை அப்புறப்படுத்தினா். அனுமதி பெற்ற கடைகள், ஹோட்டல்கள் நடத்தி வந்த சிலா் இரண்டு வழிகளை ஏற்படுத்தி பயணிகள் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்தி இருந்தனா்.

இதைக் கண்டுபிடித்த மாநகராட்சி அதிகாரிகள் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டிருந்த வழிகளை கற்களை கொண்டு அடைத்தனா். பின்னா் மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து கடைகளுக்கும் சென்று பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமித்து கடைகள் வைக்கக் கூடாது. மீறி கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com