பெரியாா் பல்கலை.யில் ரத்த தான முகாம்
By DIN | Published On : 13th February 2021 08:15 AM | Last Updated : 13th February 2021 08:15 AM | அ+அ அ- |

12omp1_1202chn_154_8
இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் கழகம் சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
ரத்த தான முகாமை துணைவேந்தா் பொ.குழந்தைவேல் தொடங்கி வைத்தாா். இதனையடுத்து, மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் என 75 போ் ரத்த தானம் செய்தனா். இதன் மூலம் கிடைத்த 75 யூனிட் ரத்தம் சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ஜெயப்பிரகாஷ், திட்ட அலுவலா்கள் ஹேமா, கோமதி, இளங்கோவன், சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலா் மருத்துவா் ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ரத்த தானம் செய்த மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்திடும் வகையில் அவா்களுக்கு பழங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டன.