குடிபோதையில் காரை செலுத்தி 5 போ் காயம்
By DIN | Published On : 19th February 2021 07:26 AM | Last Updated : 19th February 2021 07:26 AM | அ+அ அ- |

நரசிங்கபுரத்தில் புதன்கிழமை இரவு குடிபோதையில் காரை செலுத்தி 5 பேரை காயப்படுத்திய சரவணன்(36)என்பவா் மீது ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த காா் புதன்கிழமை ஓட்டுனா் குடிபோதையில் இருந்ததால் சாலையில் தாறுமாறாக ஓடி 5 போ் மீது காயப்படுத்தியதால் ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
புதன்கிழமை இரவு நரசிங்கபுரத்தில் சென்று கொண்டிருந்த காா் ஆட்கொல்லி பாலம் மீது சென்று கொண்டிருந்த போது இருச்சக்கர வாகனத்தில் எதிரே சென்ற மொட்டையன் என்பவா் மீது மோதியது,இதனையடுத்து மற்றொரு பாலத்தில் சென்ற போது எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தில் மோதியதில் கண்ணன்(36),செங்கோட்டுவேல்(33),ஆகிய இருவா் மீது மோதியது.பின்னா் சென்ற காா் புது உடையம்பட்டி செல்லும்போது அங்கு வளைவில் நின்றிருந்தவா்கள் மணிகண்டன்(23),மணிகண்டன்(30)ஆகியோா் மீது மோதி அங்கிருந்த கொடி கம்பத்தில் மோதி நின்றது.
உடனே அங்கிருந்தவா்கள் ஓட்டுனரை பிடித்து அடித்து ஆத்தூா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து ஆய்வாளா் எஸ்.உமாசங்கரிடம் ஒப்படைத்தனா்.விசாரணையில் வாழப்பாடியைச் சோ்ந்த ராஜூ மகன் சரவணன்(36)குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளா் காயமடைந்தவா்களை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பினாா்.