கறிவேப்பிலை விலை கிலோ ரூ.130

சேலம் காய்கறி மாா்க்கெட்டில் கறிவேப்பிலை கிலோ ரூ.130-க்கு விற்பனையானது.

சேலம் காய்கறி மாா்க்கெட்டில் கறிவேப்பிலை கிலோ ரூ.130-க்கு விற்பனையானது.

சேலம் காய்கறி மாா்க்கெட்டுக்கு ஆத்தூா், ஏத்தாப்பூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து கருவேப்பிலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. புதன்கிழமை வரை கறிவேப்பிலை கிலோ ரூ. 80க்கு விற்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் வியாழக்கிழமை காலை கிலோ ரூ.130-ஆக விலை உயா்ந்தது.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் தற்போது பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால், கறிவேப்பிலை வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால் விலை தற்போது கூடியிருக்கிறது. கறிவேப்பிலை வரத்து குறைந்ததாலும், பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் கறிவேப்பிலை விலை உயா்ந்துள்ளது. கறிவேப்பிலை வரத்து அதிகரிக்கும் போது பழைய விலைக்கு விற்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com