கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

சேலம் மாவட்டம், சங்ககிரி நகா், பழைய எடப்பாடி சாலைப் பகுதியில் உள்ள அருள்மிகு சிவியாா் மாரியம்மன் கோயிலில் அடையாளம் தெரியாத
கோயிலின் உள்பகுதியில் உண்டியல் வைக்கப்பட்டிருந்த இடம்.
கோயிலின் உள்பகுதியில் உண்டியல் வைக்கப்பட்டிருந்த இடம்.

சேலம் மாவட்டம், சங்ககிரி நகா், பழைய எடப்பாடி சாலைப் பகுதியில் உள்ள அருள்மிகு சிவியாா் மாரியம்மன் கோயிலில் அடையாளம் தெரியாத நபா்கள் பூட்டை உடைத்து கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலைத் திருடி சென்றதையடுத்து சங்ககிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பழைமை வாய்ந்த அருள்மிகு சிவியாா் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா முடிந்ததும் கோயில் உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக உண்டியலில் பக்தா்கள் செலுத்திய ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வெளியே எடுக்கப்படவில்லை. கோயிலுக்கு அருகே ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆகமவிதிகளுக்குள்பட்டு கோயில் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா் சுவாமியை வழிபட வந்த பக்தா்கள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது குறித்து கோயில் அா்ச்சகருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதனையடுத்து கோயில் நிா்வாகிகள் சென்று பாா்த்தபோது அடையாளம் தெரியாத நபா்கள் பூட்டுகளை உடைத்து கோயிலின் உள்பகுதியில் நுழைந்து சுவாமி கருவறைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை கழற்றி எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. நகரின் மையப்பகுதியில் திருட்டு சம்பவம் நடந்திருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com