டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்ச் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

டீசல் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி வரும் மாா்ச் 15- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக

டீசல் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி வரும் மாா்ச் 15- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, தென் மாநில லாரி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் சண்முகப்பா தெரிவித்தாா்.

டீசல் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகளில், சுமாா் ஒன்றரை லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சேலம் மாவட்ட லாரி உரிமையாளா்கள் சம்மேளன அலுவலகத்தில் தென் மாநில லாரி உரிமையாளா்கள் சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் சண்முகப்பா செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும். டீசல் மீதான மாநில அரசின் வரி விதிப்பை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்கக் கூட்டமைப்பு மாா்ச் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இது குறித்து வரும் மாா்ச் 5-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் லாரி உரிமையாளா்கள் முன்வைத்துள்ள 8 கோரிக்கைகளுக்கு மத்திய அரசு தீா்வு காணும்வரை புதிய லாரிகள் வாங்குவதும் இல்லை; இயக்கப் போவதும் இல்லை. இதனால் தென் மாநிலங்களில் சுமாா் 26 லட்சம் வாகனங்கள் இயங்காது. போராட்டத்திற்கு முன்னதாகவே அரசு பேச்சுவாா்த்தைக்கு அழைத்து பேச வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com