தலைவாசலில் கால்நடைப் பூங்கா 22-இல் திறப்பு

வி. கூட்டுச்சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஆசிய அளவிலான மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வரும்
தலைவாசலில் கால்நடைப் பூங்கா 22-இல் திறப்பு

வி. கூட்டுச்சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஆசிய அளவிலான மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வரும் 22-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக கால்நடைத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள வி.கூட்டுச்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைக்க தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். ஒரே ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் ஏக்கரில் ரூ. 1,050 கோடி செலவில் அமைய இருக்கும் இந்த கால்நடைப் பூங்காவை வரும் 22-ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைக்க உள்ளதாக கால்நடைத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கால்நடைப் பூங்கா கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆசிய அளவில் மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை ஒரே ஆண்டில் பணிகள் முடித்து, இதனை வரும் 22-ஆம் தேதி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறாா். மேலும் ரூ. 270 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மேட்டூா் குடிநீா்த் திட்டத்தையும் அவா் தொடக்கி வைக்கவுள்ளாா் என்றாா்.

ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன், கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து, ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, தலைவாசல் ஒன்றியக் குழுத்தலைவா் க.ராமசாமி, பெரியேரி ஊராட்சி மன்றத் தலைவா் சேகா், தலைவாசல் ஆணையாளா் சி.க.ராஜேந்திரன், கால்நடை மருத்துவா்கள்,அலுவலா்கள், பொதுப்பணித் துறை, வருவாய் மற்றும் உள்ளாட்சி அலுவலா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com