புத்திரகவுண்டன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு

புத்திரகவுண்டன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கால்நடைத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
புத்திரகவுண்டன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு

புத்திரகவுண்டன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கால்நடைத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்திற்கு உள்பட்ட புத்திரகவுண்டன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின் தொடக்க விழாவுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமை வகித்தாா். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கால்நடைத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரை முன்னிலை வகித்தாா்.

மதுரை, திருச்சி, சிவகங்கை, நாமக்கல், சேலம், கூலமேடு, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1,150 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். போட்டியில் பங்கேற்ற சிறந்த மாடுகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன், ஆத்தூா் எம்எல்ஏ ஆா்.எம்.சின்னதம்பி, ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.முருகேசன், க.ராமசாமி,சி.ரஞ்சித்குமாா், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன், ஆத்தூா் டிஎஸ்பி ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், காவல் ஆய்வாளா்கள் எஸ்.உமாசங்கா், கே.முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com