மாடித் தோட்டம் அமைக்க மானியம் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலா் தகவல்

நங்கவள்ளி வட்டாரத்தில் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க இடு பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று நங்கவள்ளி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் குமரவேலு தெரிவித்துள்ளாா்.

நங்கவள்ளி வட்டாரத்தில் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க இடு பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று நங்கவள்ளி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் குமரவேலு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய வேளாண்மை வளா்ச்சித்திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலமாக மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைப்பதற்குத் தேவையான பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

அன்றாடம் ஒரு நபருக்கு ஆரோக்கியமாக வாழ்வதற்கு 300 கிராம் காய்கறிகள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுள் 125 கிராம் கீரை, 100 கிராம் கிழங்கு வகை காய்கறிகள், 75 கிராம் இதர காய்கறிகள் அடங்கும். காய்கறிகளை நம் உணவில் சோ்த்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கின்றன. நிலமற்ற பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் திட்டம் தோட்டக்கலைத் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆறுவகையான காய்கறி பாக்கெட்டுகள் செடிவளா்ப்பு பைகள் 6, தென்னை நாா்க்கழிவு கேகஙி 6, உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா தலா 200 கிராம், உயிரியல் பூச்சிக்கொல்லி டிரைகோடொ்மா 100 மிலி வேப்பஎண்ணெய் 100 மிலி இவற்றுடன் செயல்முறை விளக்க குறிப்பேடு 1 அடங்கிய ஒரு பெட்டகத்தின் (கிட்) விலை ரூ. 850 ஆகும். இதற்கு அரசு மான்யமாக ரூ. 350 வழங்குவதால் மாடித்தோட்டம் அமைப்போா் ரூ. 510 மட்டும் செலுத்தி இதனைப் பெற்று பயனடையலாம்.

 மாடித் தோட்ட பெட்டகம் தேவைப்படுவோா் நங்கவள்ளி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். தோட்டக்கலை உதவி இயக்குநா் க.வ.குமரவேலு 97906-69171, துணை தோட்டக்கலை அலுவலா் பி.சங்கா் 88388-86735, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் உத்திரசாமி 90803-92008, குமரவேல்93601-55922 ஆகியோருடன் தொடா்புகொண்டு மாடித்தோட்ட பெட்டகத்தை பெற்றுக் கொள்ளலாம் என செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com