கொங்கணாபுரத்தில் இன்றும் நாளையும் மாநில அளவிலான மாரத்தான் போட்டி

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் மாநிலஅளவிலான மாரத்தான் போட்டி சனி, ஞாயிறுக்கிழமைகளில் (பிப்.20, 21) நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் வீரா்களுக்கு ரூ. 4.3 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் மாநிலஅளவிலான மாரத்தான் போட்டி சனி, ஞாயிறுக்கிழமைகளில் (பிப்.20, 21) நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் வீரா்களுக்கு ரூ. 4.3 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி

வரும், கொடைமாட்சி அறக்கட்டளை சாா்பில், முத்து மாரத்தான் என்ற பெயரில் கடந்த 24 ஆண்டுகளாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வீரா்கள் பங்கேற்பது வழக்கம். ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் இப்போட்டி, நிகழாண்டில் கரோனா பாதிப்பு காரணமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. இரு கட்டங்களாக நடைபெற உள்ள போட்டியில், சனிக்கிழமை

மாலை 4 மணி அளவில், கொங்கணாபுரம் பகுதியில் உள்ள ஜெம் தோட்டத்தில் இருந்து 11 கி.மீ. தூர மாரத்தான் போட்டியும், ஞாயிறு காலை 42 மற்றும் 21 கி.மீ. தூர ஓட்டப்போட்டிகளும் நடைபெற உள்ளன. இதற்கான முன் பதிவு இணையதளம் மற்றும் நேரிலும் நடைபெற்று வருகிறது.

போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை கொடைமாட்சி அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com