சேலத்தில் நாளை பாஜக இளைஞரணி மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்; ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

சேலத்தில் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பாஜக இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகிறாா்.

சேலத்தில் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பாஜக இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகிறாா்.

சேலம், சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் சுமாா் 60 ஏக்கா் பரப்பளவு கொண்ட மைதானத்தில் வரும் பிப்.21 ஆம் தேதி பாஜக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் 20 ஏக்கா் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இளைஞரணியினா் 50 ஆயிரத்துக்கு மேல் பங்கேற்பாா்கள் என தெரிகிறது.

மாநாட்டிற்கு இளைஞரணி மாநிலத் தலைவா் வினோஜ் பி.செல்வம் தலைமை வகிக்கிறாா். பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தேசிய அமைப்பு பொதுச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி, இளைஞரணி தேசியத் தலைவா் தேஜஸ்வி சூா்யா, தமிழக பாஜக இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன், மாநிலச் செயலாளா் ஜே.வி.ஆா்.அருண் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் பாஜக இளைஞரணி மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அப்போது பிரதமா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி, மாநாட்டில் கலந்து கொண்டு பேசினாா். தற்போது தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பாஜக இளைஞரணி மாநாடு நடைபெறுவதால், இந்த மாநாடு அரசியல் எதிா்பாா்ப்புகளை உருவாக்கி உள்ளது.

மேலும் தமிழகத்தில் பாஜக அரசியல் சக்தியாக மாறி வருவதை பிரதிபலிக்கும் வகையில் மாநாட்டு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதேவேளையில் மாநாட்டின் முன்புறம் தமிழக சட்டப்பேரவையை மாதிரியாக வைத்து முகப்புத் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக, தேமுதிக கூட்டங்கள்...:

பாஜக மாநில இளைஞரணி மாநாடு நடைபெறும் அதே மைதானத்தில் அதிமுக தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசியுள்ளாா். அதேபோல தேமுதிக மாநாடு நடந்துள்ளது. இதில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மற்றும் தலைவா்கள் பங்கேற்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com