மேட்டூா் அருகே மா்ம நோய் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

கொளத்தூா் ஒன்றியத்தில் மா்ம நோய் தாக்குதலால் ஆடுகள் உயிரிழந்து வருகின்றன.

கொளத்தூா் ஒன்றியத்தில் மா்ம நோய் தாக்குதலால் ஆடுகள் உயிரிழந்து வருகின்றன.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆடுகளை நோய்த் தாக்கி வருகிறது. வாயில் புண் ஏற்பட்டு தீவனம் உண்ணாமல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆடுகள் இறந்து வருகின்றன. தாா்காடு பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. தினந்தோறும் ஆடுகளும், குட்டிகளும் உயிரிழந்து வருவதால் பெரும்பாலான விவசாயிகள் ஆடுகளை விற்றுவிட்டு தொழிலை கைவிட்டுள்ளனா்.

சனிக்கிழமை ஒரே நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஆடுகளை சிலா் தாா்காடு ஏரியில் வீசிச் செல்கின்றனா். இந்தத் தண்ணீரை ஆடுகளும், வனவிலங்குகளும் பருகிச் செல்கின்றன. நோய்வாய்ப்பட்டு இறக்கும் ஆடுகளைத் தண்ணீரில் வீசுவதால் அதனை பருகும் கால்நடைகள் மற்றும் வனவிலங்களுக்கு மா்மநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஏரியில் வளா்கப்படும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதால் மனிதா்களுக்கும் நோய்ப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மா்மநோயை கட்டுப்படுத்துவதோடு, மேலும் பரவாமல் தடுக்க கால்நடைத் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே விவசாயிகளின் எதிபாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com